முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேட்டுப்பாளையத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில்... சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மேட்டுப்பாளையத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில்... சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கோடை சிறப்பு மலை ரயில்

கோடை சிறப்பு மலை ரயில்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை செல்லும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இன்று முதல் கோடைகால சேவையை துவங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகை வரை பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை ரயில் பகல் 12 மணியளவில் உதகை சென்றடையும். பின்னர் மீண்டும் உதகையில் இருந்து பகல் 2  மணியளவில் புறப்பட்டு மாலை 5.40 மணியளவில் மேட்டுப்பாளையம் வந்தடையும்.

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். சுற்றுலா பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்மலை ரயில் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஒருமுறை மட்டுமே மலை ரயில் இயக்கப்பட்டு வருவதால் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும் பலருக்கும் மலை ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடை கால சிறப்பு மலை ரயில் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வருகிறது.

வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரு நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த மலை ரயில் இம்மாதம் 21ம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் கோடைகால சிறப்பு ரயில் தனது சேவை துவங்கியது. வழக்கமான மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும்.

இந்நிலையில் இன்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட்டது. 4 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு மலைரயில் பிற்பகல் 2.25 மணிக்கு உதகை சென்றடையும். வழக்கமான மலை ரயிலில் டிக்கெட் கிடைக்காத சுற்றுலா பயணிகள் இந்த சிறப்பு மலைர யிலில் முன்பதிவு செய்து உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

செய்தியாளர் : எஸ்.யோகேஸ்வரன்

First published:

Tags: Coimbatore, Summer