மதுரை, திருச்சியில் மக்களை மகிழ்வித்த கோடை மழை...

Youtube Video

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 • Share this:
  மன்னார்புரம், கே.கே.நகர், கரு மண்டபம், மிளகுப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகரிலும் மழை பெய்கிறது. பல இடங்களில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

  திருச்சி

  திருச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும், அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழையால் வெயில் தணிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  கொடைக்கானல்

  கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பூம்பாறை, மன்னனூர், கவுஞ்சி, தாண்டிக்குடி பகுதிகளில் மிதமான மழை பதிவானது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இரவு வரை விட்டு விட்டு பெய்த நிலையில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரத்தில் திடீர் கோடை மழை மக்களை குளிர்வித்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று மாலை ராமநாதபுரத்தில மழை பெய்தது. அடுத்த 10 நிமிடத்திற்கு உள்ளாகவே பஜார் சிகில்ராஜ வீதியில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

  மதுரை

  கோடை வெப்பத்தில் தவித்த மதுரை மக்களை குளிர்விக்கும் விதமாக அதிகாலை கனமழை பெய்தது. நள்ளிரவு ஒரு மணி அளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மதுரை நகர்ப் பகுதிகளான தெப்பக்குளம், ஐராவதநல்லூர், அண்ணாநகர், காமராஜர் சாலை, கோரிப்பாளையம், கே.கே நகர், மாட்டுத்தாவணி, புதூர், ஒத்தக்கடை, அவனியாபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  மேலும் படிக்க... உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவிகித பேருக்கு கொரோனா? இன்றைய வழக்கு விசாரணைகள் ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைப்பு...

  சென்னை

  சென்னையிலும் சில பகுதிகளில் திங்கள்கிழமை காலை திடீர் மழை பெய்தது. விருகம்பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் காலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: