கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு: அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இன்னும் உயரும்

நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.

கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு: அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இன்னும் உயரும்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: May 29, 2019, 8:19 AM IST
  • Share this:
கத்திரி வெயில் என பொதுவாக அழைக்கப்படும் கோடை வெயில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு, இயல்பை விட 5 முதல் 6 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் பல இடங்களில் அனல் காற்று வீசும்

கோடை வெயிலால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் 3 நாட்களுக்கு இயல்பைவிட 6 டிகிரி வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அந்த வானிலை மையம் கூறியுள்ளது.

கோவை இந்நிலையில் கடும் வெப்பத்தை தணிக்கும் விதமாக தமிழகத்தில் சில இடங்களில் மழையும் பெய்தது. நேற்றிரவு கோவை நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவானது. மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சூறைகாற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆரணியை சுற்றியுள்ள கிராமங்களான சேவூர், இரும்பேடு, காமக்கூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக ஆரணி - வேலூர் சாலையில் பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரவு பத்து மணிக்கு மேல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வெப்பத்தை தணித்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இடியுடன் பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கி ராணி என்பவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் சோகமடைந்துள்ளனர்.

Also see... வளர்ந்து வருகிறாரா சீமான்?

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading