சீன செயலிகளுக்குத் தடை: அமெரிக்காவுடன் பிரச்னை வந்தால்...? - சுமந்த் சி ராமன் கேள்வி

சுமந்த் சி ராமன் (படம்: Twitter)

அமெரிக்காவுடன் பிரச்னை வந்தால் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுள் எல்லாவற்றையும் தடை செய்துவிடுவோமா என சுமந்த் சி ராமன் ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட் உள்ளிட்ட 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. சீனாவுடன் எல்லைப் பிரச்னை உக்கிரமாக இருந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  மக்களின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டும், தகவல் பாதுகாப்புக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

  இது தொடர்பாக, அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆக, நாளைக்கு நமக்கு அமெரிக்காவுடன் பிரச்னை வந்தால் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுள் எல்லாவற்றையும் தடை செய்துவிடுவோமா?” என்று பதிவு செய்துள்ளார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: