டெல்லி பல்கலைக்கழகம் தனது படைப்பை நீக்க சாதிய பாகுபாடே காரணம் - சுகிர்தராணி

சுகிர்தராணி - பாமா

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களை, நசுக்க வேண்டும் என்பதே டெல்லி பல்கலைக்கழகத்தின் நோக்கம் என சுகிர்தராணி குற்றச்சாட்டு.

 • Share this:
  டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து தன்னுடைய படைப்பு நீக்கப்பட்டதற்கு சாதிய பாகுபாடே காரணம் என பிரபல எழுத்தாளர் சுகிர்தராணி கூறியுள்ளார்.

  டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்தில், பிரபல தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழக எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணியின் படைப்புகளும், பிரபல எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவியின் திரௌபதி படைப்பும் நீக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், தன்னுடைய படைப்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னனிக் காரணம் சாதிய பாகுபாடே என்று எழுத்தாளர் சுகிர்தராணி குற்றச்சாட்டியுள்ளார்.

  இது குறித்து அவர், “ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களை நசுக்க வேண்டும் என்பதன் நோக்கமே தன்னுடைய பாடப்பகுதி நீக்கப்படுவதற்கு காரணம்.

  தலித் படைப்பாளிகள் படைப்புகள் நீக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த இடத்தில் மற்றுமொரு தலித் படைப்பாளியின் வேறு ஒரு படைப்பை வைத்திருந்தால் சாதி பாகுபாடு பார்க்க வில்லை என்று கருதலாம். ஆனால், உயர் சாதியை சேர்ந்த மற்றொரு படைப்பாளியின் படைப்பே பாடப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.

  இன்றைய காலகட்டத்திலும் மலம் அள்ளும் அவலம் நீடித்து இருப்பதை எடுத்துரைக்கும் தங்களுடைய படைப்புகளை நீக்குவதன் வாயிலாக சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் இது போன்ற செயல்களை இன்றளவும் செய்து வருகின்றனர் என்பதை மறைப்பதே நோக்கம்” என்று தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

  Must Read : ஆண்டுதோறும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைப்பிடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

  தலித் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மாற்றாக முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களான சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்புகள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழும் தமிழ் நூல்களும் புறக்கணிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி இருந்தார். இதேபோல பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: