கோவை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி ஆக சுஜித் குமார் நியமனம்!
கோவை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி ஆக சுஜித் குமார் நியமனம்!
சுஜித் குமார் நியமனம்
மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்பி மற்றும் உள்துறை செயலர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மாவட்ட நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தின் எஸ்பி பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து புதிய எஸ்பி-யாக சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் புகார் அளித்த மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., பாண்டியராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்தது.
மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்பி மற்றும் உள்துறை செயலர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளததை அடுத்து, எஸ்பி பாண்டியராஜன் மீது வழக்கு தொடர்வது குறித்து கோவை மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
எஸ்.பி பாண்டியராஜன்
இந்நிலையில், இன்று அதிரடியாக எஸ்பி பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவை மாவட்டத்திற்கு புதிய எஸ்பி-யாக சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Also see... தேர்தல் 40/40: திருவள்ளூர் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.