மதுரை மாணவி உயிரிழப்பு: ”தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல” - மு.க.ஸ்டாலின்

மதுரை மாணவி உயிரிழப்பு: ”தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல” - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

”தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நீட் அச்சத்தால் அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் மேலும் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, அதே காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

  மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் கடிதம்


  Also read: நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்..  ’எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு’ என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது. ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  மதுரை பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் துர்கா நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மீண்டும் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்துவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்தார்.

  நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சத்தில் மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Rizwan
  First published: