ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஆளொசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கவேண்டும் என விவசாயிகளும் பல்வேறு அரசிலக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படுமா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என நேற்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆலோசனை முடிந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும், இதற்கான டோக்கன் ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Pongal, Pongal Gift