Home » News » Tamil-nadu » SUGARCANE SALES INCREASE IN KOYAMBEDU MARKET SUR

Pongal | கோயம்பேடு சந்தையில் களைகட்டும் கரும்பு மஞ்சள் விற்பனை!

இந்த வருடம் அரசு நியாயவிலைக் கடை கொள்முதலுக்கு கரும்பு பெரும்பாலும் கொள்முதல் செய்யப் பட்டதால் கரும்பு வரத்து குறைந்துள்ளது.

Pongal | கோயம்பேடு சந்தையில் களைகட்டும் கரும்பு மஞ்சள் விற்பனை!
கரும்பு விற்பனை
  • Share this:
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு பகுதியில் போகி பொங்கலை முன்னிட்டு நள்ளிரவு முதல் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை அதிரித்துள்ளது. கடந்த வருடத்தை விட மஞ்சள் மற்றும் கரும்பின் விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தேனி கம்பம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து இஞ்சி மஞ்சள் அதிகமாக டாக்டர்களில் கொண்டுவரப்பட்டு கோயம்பேடு காய்கறிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் பணி கரும்பும் தமிழகத்தின் கடலூர் பண்ருட்டி சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 1000 லாரிகள் மூலம் கோயம்பேடு கொண்டு வரப்பட்டு விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்துவந்தனர்.


மேலும் படிக்க... Master Release: தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த வருடம் அரசு நியாயவிலைக் கடை கொள்முதலுக்கு கரும்பு பெரும்பாலும் கொள்முதல் செய்யப் பட்டதால், பொங்கலுக்கு கோயம்பேட்டில் விற்பனையானது கடந்த வருடத்தை விட கரும்பு வரத்து குறைவாகவே இருந்தது.

அதிகப்படியாக கும்மிடிப்பூண்டி பகுதியில் விளைவிக்கப்பட்ட மஞ்சள், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அதிகமாக கொண்டுவரப்பட்டது. இந்த வருடம் மழை காரணமாக விளைச்சல் குறைவாக இருந்தாலும் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட மஞ்சள் நேற்று ஒரே நாளில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.பண்ருட்டி சேலம் கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வருடம் மழை பொழிவில் இருந்து தப்பிய கரும்புகள் அரசின் நியாயவிலை கடைகளுக்கு போக மீதம் உள்ள கரும்புகள் நேரடியாக விவசாயிகளால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: January 13, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading