• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பும் நெய்யும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பும் நெய்யும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் தொகுப்பு

பொங்கல் தொகுப்பு

கடந்த 15 நாட்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 7.5 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களும் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் முதல் முறையாக நெய் மற்றும் 20 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பும் சேர்ந்த தொகுப்பு வழங்கப்படும்  என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதுமுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இத்தொகுப்பில் , பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி , வெல்லம் , முந்திரி , திராட்சை , ஏலக்காய் , பாசிப்பருப்பு , நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள் , மிளகாய் தூள் , மல்லித்தூள் , கடுகு , சீரகம் , மிளகு , புளி கடலைப் பருப்பு , உளுத்தம் பருப்பு , ரவை , கோதுமை மாவு , உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை ( 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ) 2 கோடியே 15, லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் இவற்றுடன் ஒரு முழு கரும்பு மற்றும் முதல் முறையாக பொங்கல் பரிசு தொகுப்புடன் நெய்யும் சேர்த்து வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார் . பரிசு தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மண்டல வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பில் பரிசுப் பணமும் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி


    கடந்த 15 நாட்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 7.5 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களும் வழங்கப்பட இருப்பதாக கூறிய அமைச்சர், வடகிழக்கு பருவமழையை  பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்குதல் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று கூறினார்.

    கடந்த அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கூடுதலாக 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த ஆட்சியை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் சுமார் 95% நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்

    மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வது தொடர்பாக அவற்றின் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி உள்ளதாகவும் அது குறித்து மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்த பின்னர் ஈரப்பதம் குறைந்த அளவு உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்

    மேலும் படிக்க: ஆதிக்க கலாச்சாரத்தை தகர்த்தெரிய முடியவில்லை: சஞ்ஜிப் பானர்ஜி கடிதம்!


    தமிழகத்தில் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி 97% மக்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருவதாகவும் அதேபோன்று இந்த பரிசு தொகுப்புகளையும் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: