Home /News /tamil-nadu /

நயினார்நாகேந்திரனை உருவாக்கியதே அதிமுக தான்... அவர் மறந்துவிடக்கூடாது : அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன்

நயினார்நாகேந்திரனை உருவாக்கியதே அதிமுக தான்... அவர் மறந்துவிடக்கூடாது : அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran : தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை என நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் நெல்லையில், செய்தியார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நயினார்நாகேந்திரன் அதிமுகவில் இருந்த போது அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா என்று கூறிய அவர், தன்னை உருவாக்கியதே அதிமுகதான் என்பதை நயினார்நாகேந்திரன் மறந்துவிடக்கூடாது என்று கூறினார்.

    மேலும், அதிமுகவை விமர்சனம் செய்ய அவருக்கு தகுதி இல்லை என்றும், அதிமுகவை விமர்சனம் செய்தால், அதிமுக தொண்டர்கள், நயினார்நாகேந்திரன் நெல்லை வரும் போது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேறிய சுதா பரமசிவன், அதிமுக இல்லாமல் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிமுக கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்றார். அதிமுக கூட்டணி இருந்த காரணத்தினால்தான் பாஜகவால் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். அதிமுக வை வைத்து வளர்ந்து விட்டு, வளர்த்து விட்ட இயக்கத்தை பற்றி பேசுபவர்கள் நல்லாவே இருக்க மாட்டார்கள் என்றும் சுதா பரமசிவன் அப்போது தெரிவித்தார்.

    அரியலூர் சிறுமியின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது, அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது என்றும் நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை எனவும் போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    Must Read : பெரியார் போல் மிமிக்ரி செய்த ஹெச்.ராஜா...

    இந்நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நயினார் நாகேந்திரன் பேச்சை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, BJP, Nainar Nagendran

    அடுத்த செய்தி