திருவண்ணாமலையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.. கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி பழிக்கு பழி வாங்கிய மனைவி.. (வீடியோ)

Youtube Video

திருவண்ணாமலையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, திமுக நகரச் செயலாளர் கொலைக்கு பழிவாங்குவதற்காக, அவரது மனைவியே கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி பங்க் பாபுவை தீர்த்துக் கட்டியது அம்பலமாகியுள்ளது. உண்மை என்ன?

 • Share this:
  திருவண்ணாமலை வட்டாரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த பங்க் பாபு, கடந்த 3ஆம் தேதி டீக்கடையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டு திமுக நகரச் செயலாளர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னணி என்ன?

  திருவண்ணாமலை காந்திநகர் 1வது தெருவில் வசித்தவர் பங்க் பாபு. ரியல் எஸ்டே்ட தொழில் பார்த்து வந்த இவர், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் போட்டி காரணமாக திருவண்ணாமலையில் அப்போதைய திமுக நகர செயலாளராக இருந்த கனகராஜை வெட்டிக் கொலை செய்தார் பங்க் பாபு.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பங்க் பாபு மீண்டும் கட்டப்பஞ்சாயத்து ரியல் எஸ்டேட் என வலம் வந்து கொண்டிருந்தார்.

  இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் அவரது வீட்டு அருகே உள்ள பழைய புறவழிச்சாலை காந்திநகர் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத முககவசம் அணிந்த 4 பேர் கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பியோடி விட்டது.இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகி இருந்தன.

  இந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், 5 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகள் யார் என விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தனது கணவர் கொலையில் கனகராஜ் குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாக, பங்க் பாபுவின் மனைவி ஆனந்தி, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கனகராஜின் மனைவி ஞானசவுந்தரியை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.

  அப்போதுதான், தனது கணவர் கனகராஜின் கொலைக்கு பழி வாங்குவதற்காக, கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசிய ஞானசவுந்தரி, முன்பணமாக 40 லட்சம் ரூபாய் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஞானசவுந்தரியுடன், அவரது மாமியார் ராணி, உறவினரான சுரேஷ் ஆகியோரையும் கடந்த 6ஆம் தேதி கைது செய்தனர்.

  மேலும் படிக்க...புதுச்சேரியில் ஆட்டோவில் பயணித்த நடிகர் விஷால்

  அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த வசூல் ராஜா குழுவைச் சேர்ந்த வினோத்குமார், சிவராத்திரி மடத்தெருவைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

   

  மேலும், கொலையில் தொடர்புடைய விவேகானந்தன், கார்த்தி மற்றும் பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கூலிப்படையினர் உள்பட ஆறு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கணவர் கொலைக்கு பழிவாங்குவதற்காக, மனைவி கூலிப்படை மூலம் பிரபல ரவுடியை தீர்த்துக் கட்டிய சம்பவம், அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: