தமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை: 4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தைப் போலவே தெலங்கானாவிலும் ஐதராபாத், ராஜன்னா சிரிசில்லா, கரீம் நகர், சித்திபேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை பெரிய ஐஸ் கட்டிகளுடன் கோடை மழை கொட்டியது.

தமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த மழை: 4 பேர் உயிரிழப்பு
மழை
  • News18
  • Last Updated: April 20, 2019, 7:58 AM IST
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மழை காரணமாக இடி, மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

சேலம்

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், சேலத்தில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் வழிந்து ஓடியது, இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மின்தடையும் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.


வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென வாணியம்பாடி பகுதியில் மழை பெய்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சிதிருச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. உறையூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காற்றும் வீசியது. அப்போது பனிக்கன்தெருவைச் சேர்ந்த கிட்டு என்பவர், தனது வீட்டு அருகே விழுந்த தகரத்தை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. அவரின் அலறல் சப்தத்தை கேட்டு, அவரது அண்ணன் மகன் மகாதேவன் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சுற்றியுள்ள இடங்களில் நேற்று 2 மணி நேரம் கனமழை பெய்தது. அப்போது ஆவாரம்பட்டியிலுள்ள மண்பாண்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தின் மீது பலமாக இடிதாக்கியது. இதனால் கட்டிடம் இடிந்துள்ளது. இந்த நேரத்தில் கட்டிடத்தின்கீழ், மண்பாண்டம் செய்து கொண்டிருந்த ராமநாதன் என்ற தொழிலாளி, கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். நெல்லை மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பொன்னமங்கலத்தில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள சீலைக்காரி அம்மன் கோவிலில் நேற்று தீமிதி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அங்கு தீமிதிக்கத் தயாராக இருந்தனர். அப்போது அந்த கிராமத்தில் மட்டும் திடீரென சூறைக்காற்று மற்றும் இடியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதில், அக்னிக்குண்டம் முழுமையாக அணைந்து மழைநீர் தேங்கியது. வேறு வழியின்றி நீர் நிறம்பிய அக்னிகுண்டத்தில் நடந்து சென்று வழிபட்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பலத்த காற்றுடன் நேற்று மாலையில் மழை பெய்தது. மழையின்போது இடி தாக்கியதில் விநாயகர் கோயில் கோபுரத்தில் விரிசல் விழுந்தது. அங்கு பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மரக்கிளை விழுந்ததில் அங்கிருந்த கொட்டகை ஒன்றும் சேதமடைந்தது.

கொடைக்கானல்

கொடைக்கானலில் 4-வது நாளாக 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழை காரணமாக அங்குள்ள அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்சார சேவை பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் மின் இணைப்பு துண்டானது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையத்தை அடுத்துள்ள குப்பாண்டபாளையம், சடையம்பாளையம், தட்டாங்குட்டை, சீராம்பாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் மின்வெட்டு ஏற்பட்டது.

தமிழகத்தைப் போலவே தெலங்கானாவிலும் ஐதராபாத், ராஜன்னா சிரிசில்லா, கரீம் நகர், சித்திபேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை பெரிய ஐஸ் கட்டிகளுடன் கோடை மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மா மரங்களும், விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் ஐஸ் கட்டி மழையால் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

Also see... கிணறு தோண்டும் போது கோர விபத்து... லிப்ட் கம்பி அறுந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு


Also see... விண்ணைப் பிளந்த கோவிந்தா முழக்கம்..! வைகை ஆற்றில் 

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading