தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி நிறுவனங்களில் திடீர் ரெய்டு

கோப்பு படம்

சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி., போத்தீஸ், நல்லி சில்க்ஸ், ஆனந்தம் ரீட்டைல்ஸ் பி.லிட். ஆகிய நிறுவனங்களில் ரெய்டு நடைபெறுகிறது.

 • Share this:
  தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  ஜவுளி நிறுவனங்கள் போலியான ஆவணங்களை தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாக வணிகவரிதுறையினருக்கு புகார்கள் வந்ததன. அதன் அடிப்படையில் இன்று மாலை முதல் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரபல ஜவுளி நிறுவனங்கள் இருக்கக்கூடிய முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

  சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி., போத்தீஸ், நல்லி சில்க்ஸ், ஆனந்தம் ரீட்டைல்ஸ் பி.லிட். ஆகிய நிறுவனங்களில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also Read : 6 - 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

  அந்த வகையில் சென்னையில் இயங்கி வரக்கூடிய நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி,போத்தீஸ் ஆகிய நிறுவனங்களில் 39 இடங்கள், நெல்லையில் 15 இடங்கள், கோவை, மதுரையில் தலா 13 இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 103 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: