Home /News /tamil-nadu /

மத்திய அமைச்சர் அமித்ஷா பயணத்தில் திடீர் மாற்றம் : இன்று இரவு சென்னை வருகிறார்

மத்திய அமைச்சர் அமித்ஷா பயணத்தில் திடீர் மாற்றம் : இன்று இரவு சென்னை வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Amit Shah : புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு அவர் சென்னை வருகிறார்.

    ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா வழியாக புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது பயணத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று இரவு சென்னை வரும் அமித்ஷா, ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். (CRPF) முகாம் அலுவலகம் சென்றபின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணிக்கு ஆவடியிலிருந்து புதுச்சேரிக்கு தனி ஹெலிகாப்டரில் செல்லும் அவர், நிகழ்ச்சிகள் முடிந்தபின் சென்னை திரும்புகிறார். இதையடுத்து மாலை 6.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அமித் ஷா சுற்றுப்பயண விவரம் :

    அமித் ஷா புதுச்சேரி மாநிலத்தில், வரும் 24 ஆம் தேதி ஞாயிறன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக புதுச்சேரி செல்வதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இன்று காலையில் அந்தத் திட்டம் திடீரென மாற்றப்பட்டு, அவர் சென்னை வந்து சென்னையில் இரவு தங்கிவிட்டு மறுநாள் ஞாயிறு காலையில், சென்னை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்வதாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

    அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை டெல்லியில் இருந்து எல்லை பாதுகாப்பு படை தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கிருந்து  இரவு 7.35 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

    மறுநாள் 24 ஆம் தேதி ஞாயிறு காலை 8.30 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 8.35க்கு ஆவடி விமானப் படைத்தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் காலை 8.40 புதுச்சேரி மாநிலம் புறப்பட்டு செல்கிறார். காலை 9:30 மணிக்கு அவர் புதுச்சேரி மாநிலம் சென்றடைகிறார்.

    புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு பின்பு மாலை 5.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார். பின்பு மாலை 6.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து எல்லை பாதுகாப்பு படை தனி விமானத்தில், டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பலத்த பாதுகாப்பு:

    மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா சென்னை வருகையையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை விமான நிலையம் வந்து நேற்று  பகல் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரையில் ஒரு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தினா்.

    Must Read : கொரோனாவை போல் சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்துள்ளது: கி.வீரமணி

    இதற்கிடையே இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவும் நாளை மாலை பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னை வரும் நிகழ்ச்சி இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய தலைவா்கள் தனித்தனி விமானங்களில் சென்னை பழைய விமான நிலையம் வருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
    Published by:Suresh V
    First published:

    Tags: Amit Shah

    அடுத்த செய்தி