ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின் ரயில்சேவை நிறுத்தம்.. பாமகவினர் கல்வீச்சை தொடர்ந்து தெற்கு ரயில்வே நடவடிக்கை

கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின் ரயில்சேவை நிறுத்தம்.. பாமகவினர் கல்வீச்சை தொடர்ந்து தெற்கு ரயில்வே நடவடிக்கை

பாமக  போராட்டம்

பாமக போராட்டம்

பாமகவினர் ரயில்கள் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டதால் சென்னை தாம்பரம், கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி சென்னையில் இன்று போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்குள் பா.ம.கவினர் நுழைய முயன்றனர். பெருங்களத்தூர் அருகே அவர்களுடைய வாகனங்களை போலீசார் தடுத்துநிறுத்தினர்.

  போராட்டத்தில் பங்கேற்க போலீசார் அனுமதி மறுத்ததால் ஜி.எஸ்.டி சாலையில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்னி பேருந்துகள் மீது ஏறிநின்று பா.ம.கவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையின் தடுப்புச்சுவரை உடைத்து சேதப்படுத்தியதினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

  மேலும் படிக்க...பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்துவதா? மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்..

  சென்னை தீவுத்திடல் அருகே தாமஸ் மன்றோ சிலை அருகே பாமகவினர் தடையை மீறி பேரணி நடத்தினர். போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளையும் மீறி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாமகவினர் சென்னையை நோக்கி படை எடுத்தனர். அவர்களை அந்தந்த மாவட்ட எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னையில் பாதுகாப்பு பணிக்காக 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

  பாமகவினர் ரயில்கள் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டதால் சென்னை தாம்பரம், கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சென்னைக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் மீது பாமகவினர் கற்களை வீசினர். ரயில்களை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மின்சார ரயில்சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

  இதனிடையே பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அன்புமணியிடம், முதலமைச்சர் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, PMK, Protest, Southern railway