தினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் பா.ஜ.க எம்.பி! தமிழக பா.ஜ.க தலைவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, த.மா.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.

தினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் பா.ஜ.க எம்.பி! தமிழக பா.ஜ.க தலைவர்கள் அதிர்ச்சி
சுப்ரமணிய சுவாமி
  • News18
  • Last Updated: April 16, 2019, 12:05 AM IST
  • Share this:
தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, த.மா.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணிக்காக பிரதமர் மோடி இரண்டு தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் தேதி, நெருங்கிய நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி வைத்துள்ள நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணியசுவாமி, அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஷ்வ ஹிந்து சபையினரோடு ஆலோசனை செய்த பிறகு, தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஊழலைப் பொறுத்தவரை தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுதான். ஆனால், தினகரனைச் சேர்ந்தவர்கள் தேசிய ஒற்றுமைக்கு நல்லது’ என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading