'வாய்ச்சொல் கோழைகள் அ.தி.மு.க-வினர்’- கூட்டணியை மறந்தாரா சுப்பிரமணியன் சுவாமி?

சுப்பிரமணியன் சுவாமி.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக-வைச் சேர்ந்த ஒருவரே கூட்டணிக் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
”அ.தி.மு.க வெறும் வாய்ச்சொல் கோழைகள்” என இன்றைய அதிமுக அறிக்கையை விமர்சித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

பா.ஜ.க - அ.இ.அ.தி.மு.க கூட்டணி இணைந்து வருகிற மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளனர். தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் இன்று தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இரு கட்சியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் இருந்து வருகின்றன. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக-வைச் சேர்ந்த ஒருவரே கூட்டணிக் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சி நேரலையில் இன்று பாஜக-வின் சுப்பிரமணியன் சாமி பங்குபெற்றார். எழுவர் விடுதலை குறித்து இரண்டு முக்கிய தமிழகக் கட்சியினரும் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சமாகக் குறிப்பிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலளிக்கையில், “எழுவர் விடுதலை குறித்து அதிமுக சொல்வார்கள். அவர்கள் கோழைகள். வெறும் வாய்ச்சொல் தான். ஒரு அப்பாவி மனிதரைக் கொன்றவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி மன்னிக்கலாம் எனச் சொல்லலாம். ஆனால், இந்து மதத்தில் அப்படியொன்றும் கிடையாது. அவர்கள் இந்து மதமா வேறு மதமா தெரியவில்லை” எனப் பேசினார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்து இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Rahini M
First published: