சுப்ரமணியன் சுவாமிக்கு எதிரான வழக்கு.. உரிய முகாந்திரமின்றி அவதூறு வழக்குகள் தொடர்ந்தால் அபராதம் - அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சுப்ரமணியன் சுவாமி

உரிய முகாந்திரமின்றி அவதூறு வழக்குகள் தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசுக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

  • Share this:
    பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், உரிய முகாந்திரமின்றி அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    கடந்த 2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்காம் தேதி பிரதமர் மோடிக்கு, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி எழுதிய கடிதம் தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களில் வெளியானது. அதில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும்போது, தான் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவிடம் தொலைபேசியில் அழைத்து பேசி மீனவர்களை விடுவிக்க வகை செய்வதாகவும், ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு வெறுமனே கடிதம் மட்டுமே எழுதி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக சுப்பிரமணிய சாமி, செய்தி பிரசுரிக்கப்பட்ட இரு நாளிதழ்கள் மீது தமிழக அரசு சார்பில் கடந்த 2014ம் ஆண்டு இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரமணியன் சுவாமி சார்பில் கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

    Also read: ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    அப்போது, சுப்பிரமணியன் சுவாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி ராமசாமி, ஏற்கனவே தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்துள்ளதாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முகாந்திரம் இல்லாத விவகாரங்களில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தெரிவித்த நீதிபதி, இனிமேல் அப்படியான வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published: