விபத்தின் போது சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து இருந்தாரா? நேரில் பார்த்தவர் பதில்

சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து தான் வாகனம் ஓட்டினார் சம்பவத்தை நேரில் பார்த்த ராம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிற்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 14, 2019, 8:37 AM IST
விபத்தின் போது சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து இருந்தாரா? நேரில் பார்த்தவர் பதில்
சிசிடிவி காட்சிகள்
Vijay R | news18-tamil
Updated: September 14, 2019, 8:37 AM IST
அதிமுக நிர்வாகி வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினாரா என்ற கேள்விக்கு சம்பவத்தை நேரில் பார்த்த ராம் பதிலளித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார். சுபஸ்ரீயின் மரண செய்தி தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கை தானே முன்வந்த விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென கூறியது. பேனர் வைத்த அதிமுக நிர்வாகி மீதான வழக்கை நீதிமன்றம் கண்காணித்து வரும் என்று தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டது.


இந்நிலையில் உயிரிழந்த சுபஸ்ரீ விபத்தின்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து தான் வாகனம் ஓட்டினார் சம்பவத்தை நேரில் பார்த்த ராம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிற்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தின் போது சுபஸ்ரீ சிவப்பு நிற ஹெல்மெட்டை அணிந்து தான் வாகனம் ஓட்டினார். கீழே விழுந்த வேகத்தில் ஹெல்மெட் கலந்து சென்றது, ஆனால் உடையவில்லை என்று தெரிவித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் அவசரத்தில் இருந்ததால் அவரது ஹெல்மெட்டிற்கு தனிகவனம் செலுத்தவில்லை என்றார்.

watch : EXCLUSIVE விபத்துக்குள்ளான சுபஸ்ரீயை லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்ட அவலம்

Loading...இதனிடையே பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க வாய்ப்பே இல்லை என பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பேனர் சரிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையிலும் அதிமுக நிர்வாகி இதனை மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Watch : பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க வாய்ப்பே இல்லை: பேனர் வைத்த ஜெயகோபால்

First published: September 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...