Home /News /tamil-nadu /

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் - காரணம் இதுதான்!

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் - காரணம் இதுதான்!

சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்

ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் அளித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார்.

    தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவி வந்தன. நேற்று சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது எனது விருப்பம். 2009- ஆம் ஆண்டிற்கு பிறகு கட்சி பணிகளை மட்டுமே செய்து வந்தேன்" என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதம் முதலமைச்சரிடம் அளித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் மகத்தான வெற்றி பெற்று நாடே பாராட்டும் வகையில், அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த மனநிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: CM MK Stalin, DMK, MK Stalin

    அடுத்த செய்தி