சுபஸ்ரீ இறந்தது எதார்த்தமான விஷயம்; தமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா? - பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த்

 • News18
 • Last Updated :
 • Share this:
  பேனர் விழுந்ததை ஒரு விஷயமாக எடுத்து கொண்டு அதை அரசியல் செய்ய பார்த்தவர் தான் எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

  தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகரம் சார்பில் முப்பெரும் விழா ஏழை எளிய மக்களுக்கு நல திட்டம் வழங்கும் விழா நேற்று ஆவடியில் நடைபெற்றது.

  அதில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “பேனர் விழுந்ததை ஒரு விஷயமாக எடுத்து கொண்டு அதை அரசியல் செய்ய பார்த்தவர் தான் எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின்.

  ஆனால், இதுவே ஒரு பொது நிகழ்ச்சியோ கோவில் நிகழ்ச்சியோ வைத்திருந்து விழுந்திருந்தால் அதை வைத்து அவர் அரசியல் செய்திருக்க மாட்டார்.

  ஏனென்றால் இது எதார்த்தமாக நடந்த விஷயம் தான் இன்று தமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா” என்று பேசினார்.

  மேலும், “தமிழில் பெயர் வைப்பது என்று சொல்வதும் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்வதும் அதேபோல் சொல்வதை செய்யாமல் வாபஸ் வாங்குவதும் இது யார் செய்வார் என்றால் ஒரே கட்சி திமுக தான்.

  கவர்னரை சந்திக்க செல்லும்போது வீரவசனம் பேசிவிட்டு சென்ற ஸ்டாலின் கவர்னரை சந்தித்த பிறகு ஸ்டாலினின் முகத்தில் ஒரு மரண பயம் தெரிந்தது. அதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் பார்த்திருப்பார்கள்

  ஓரு கட்சி ஒரு கொள்கையை முழுமையாக எடுத்து கொண்டால் அந்த கொள்கையில் ஒருமனதாக இருக்க வேண்டும். கவர்னர் அழைத்து பேசியவுடன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து வாபஸ் வாங்கியது திமுக தான் என்பதை மக்களாகிய நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

  Published by:Sankar
  First published: