சமூக நீதிக் கண்காணிப்பு குழு தலைவராக சுப.வீரபாண்டியனை நியமித்து முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் “சமூகநீதிக் கண்காணிப்பு குழ“ அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும்.
இந்த பணிகளை மேற்கொள்வாடு இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
Also Read : LKG, UKG உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கீழ்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களளை நியமனம் செய்து “சமூகநீதிக் கண்காணிப்பு குழுவினை“ அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சுப. வீரபாண்டியன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.