ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வை தடுத்து நிறுத்துக.. மத்திய அரசுக்கு மதுரை எம்.பி. ட்விட்டரில் கோரிக்கை

ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வை தடுத்து நிறுத்துக.. மத்திய அரசுக்கு மதுரை எம்.பி. ட்விட்டரில் கோரிக்கை

ஏர்டெல்-வோடபோன்

ஏர்டெல்-வோடபோன்

முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), வோடபோன் (vodafone) ஆகியவை தங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரிபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்டண உயர்வை தடுக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம்  கடந்த சில மாதங்களாகவே தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தனது ப்ரிபெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை பார்தி ஏர்டெல் உயர்த்தியுள்ளது.

இதேபோல், ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியாவும் ப்ரிபெய்டு சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இரு நிறுவனங்களின் கட்டண உயர்வு அதன் வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. 25 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கட்டண உயர்வு தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏர்டெல்லும், வோடபோனும் போட்டி போட்டு கட்டண உயர்வை அறிவித்துள்ளன. ஒன்றிய அரசின் செல்லப் பிள்ளைகள் இவை… தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய் விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும். 25% கட்டண உயர்வை ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லைவ்ஸ்ட்ரீம் ஷாப்பிங்- ட்ரெண்டிற்குள் நுழையும் ட்விட்டர்!

First published:

Tags: Airtel, Su venkatesan, Vodafone