தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் ஒழிப்பு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் பதிலளித்தாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது. தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைமுறையில் இருந்துவருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து குரல் எழுப்பி வருகின்றன. இருப்பினும், தமிழகத்தில் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதாவின் மறைவுக்கு பிறகு நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டம் தமிழகத்தில் உச்சத்தை எட்டியது. அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு எதிர்ப்பை பிரதானமாக்கின. கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் மசோதா ரத்து செய்யப்பட்டது.
அதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்ட நீட் மசோதா நீண்ட தாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்ட்டது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
அனித்தாக்களின் கல்வி உரிமை;
குடியரசு தலைவரின் பதிலும்
முதல்வரின் பெயர் சூட்டலும்.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். 1/3 pic.twitter.com/l6qAc7cBbB
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 14, 2023
இதுகுறித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி நான் எழுதிய கடிதத்திற்கு, உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் இன்று பதிலளித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை- காவல்துறை விசாரணை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet Exam