ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“காமெடி பண்ணாதீங்க பாஸ்..” - அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு சு.வெங்கடேசன் ரியாக்‌ஷன்

“காமெடி பண்ணாதீங்க பாஸ்..” - அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு சு.வெங்கடேசன் ரியாக்‌ஷன்

 M.P. சு.வெங்கடேசன்

M.P. சு.வெங்கடேசன்

Su Venkatesan : மாநில உரிமை சார்ந்த விஷயத்தை பிரதமர் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. என்று கூறிய சு.வெங்கடேசன் எம்.பி. அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு சிரித்தபடி பதிலளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருச்சியில் நடைபெறும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (DREU) மாநாட்டில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி., வெங்கடேசன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் மாநிலத்தின் உரிமை சார்ந்த விஷயத்தை பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

இதற்கு மேடையிலேயே பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முதல்வரின் கோரிக்கைகளுக்கு விரைவில் பிரதமர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும், “கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக-காங்கிரஸ் அதை பாஜக மீட்க வேண்டுமா? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறாரே?” என்ற கேள்விக்கு, “பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் உரிமைக்காக இவர்கள் எவ்வளவு எல்லை மீறிப் போயிருக்கிறார்கள் என்பது பின்னோக்கி சென்று பார்த்தால் தெரியும்.

அதற்காக சட்டத்தை வளைத்தும், சட்டங்களை புதிதாக உருவாக்கியும் இருக்கிறார்கள். அதேபோல, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு. அதை தற்போது அதிகாரத்தில் உள்ள பாஜக மீட்டுத் தர வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ராஜபக்சே உடன் மு.க.ஸ்டாலின் பேசிய ஆடியோவை வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே?” என்ற கேள்விக்கு, “நிறைய ஆடியோக்கள் இருக்கு என்கிறார்கள். அத்தனையும் வெளியே வரட்டும். வந்தபின்பு கேட்டுவிட்டு சொல்கிறேன்” என்றார்.

Must Read : ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்... மாறி மாறி ஒலித்த கோஷம்!

“இலங்கை தமிழர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று குற்றம்சாட்டுகின்றனரே..?” என்ற கேள்விக்கு, “காமெடி பண்ணாதீங்க பாஸ்..” என்றார் சிரித்தபடி.

First published:

Tags: Annamalai, CPM, Su venkatesan, Trichy