தெற்கு ரயில்வேயின் டெக்னீசியன் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 2,556 பேரில் 1,686 பேர் இந்தியில் எழுதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2018ல் பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றவர்களின் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தார்.
இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த அமைச்சர் பியூஸ் கோயல், தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 139 பேர் என குறிப்பிட்டிருந்தார். தேர்ச்சி பெற்றவர்கள் எந்தெந்த மாநிலங்களின் முகவரிகளைக் கொண்டவர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் தரவில்லை. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், இந்தி பேசக் கூடியவர்கள் 66 சதவீதம் டெக்னீசியன் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
மேலும் கூறுகையில், ரயில்வே நியமனங்களில் தொடர்ந்து அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாகவே தேர்ச்சி பெறுவது நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியதோடு, இந்தி பேசுபவர்களின் பணி நியமனத்தை தென்னகத்தில் அதிகமாக்கும் விதமாக இது உள்ளது என சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.