• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'கஜா' புயல் நிவாரணம் வழங்கிய 'தானே' புயலால் பாதிப்படைந்த மாணவர்கள்!

'கஜா' புயல் நிவாரணம் வழங்கிய 'தானே' புயலால் பாதிப்படைந்த மாணவர்கள்!

உண்டியல் பணத்தை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கும் மாணவர்கள்

உண்டியல் பணத்தை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கும் மாணவர்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தானே புயலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கள் சேமிப்பு பணம் 20 ஆயிரம் ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு சுனாமி மற்றும் கடந்த 2011-ம் ஆண்டு தானே புயலாலும் கடலூர் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இதில் அம்மாவட்ட மக்கள் ஒரு மாதம் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இதனைத்தொடர்ந்து நீலம் புயல், நிஷா புயல்,  2015-ம் ஆண்டு வரலாறு காணாத மழை வெள்ளத்தில் என கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தானே புயல், மழை வெள்ளத்தின் போது கடலூர் மாவட்ட மக்களுக்கு பல்வேறு பகுதியில் இருந்து உதவும் கரங்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

    சுனாமி, தானே புயலின் போதும் மழை வெள்ளத்தின் போதும் கடலூர் மாவட்டம் மடவாபள்ளம் கிராமத்தில் உள்ள மக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மடவாபள்ளம் பகுதி மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பல மாவட்டங்களில் இருந்து நிவாரணம் மற்றும் நிதி உதவிகள் பலரால் வழங்கப்பட்டன.

    மாணவர்கள் பணம் சேர்த்து வைத்துள்ள உண்டியல்


    ஆண்டு தோறும் இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு உண்டியல் கொடுத்து சிறு சேமிப்பு மூலம் ஆதரவற்றோர் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு உதவ பள்ளி நிர்வாகம் சிறு சேகிப்பு பழக்கத்தை நடைமுறைப்படுத்தியது.

    இந்த ஆண்டு 413 மாணவ மாணவிகளால் சேமிக்கப்பட்ட உண்டியல் பணத்தை ஆதவற்றோர்களுக்கு கொடுக்காமல் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதிக்கு கொடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.

    சேமிப்பு பணத்தை மாணவர்கள் ஆட்சியரிடம் வழங்கினர்


    அதனைத்தொடர்ந்து சிற்றுண்டிகள் காசு சேர்ந்த பணத்தை உண்டியல் உடைத்து 20,535 ரூபாயை இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொடுக்க கூறி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களிடம் மாணவர்கள் கொடுத்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: