Home /News /tamil-nadu /

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்க கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்க கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தொற்று பரவலைத் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், சென்னை மாநகராட்சி ஆணையர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், அண்ணா பல்கலை கழக மாணவர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் புதியதாக யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும், ஏற்கனவே தொற்று உறுதியான மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தொற்று பரவலைத் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி அல்லது மாணவர்கள் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை எனவும், பட்டமளிப்பு போன்ற அவசியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

    இதனிடையே, பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, தினசரி கொரோனா பாதிப்பை பூஜ்ஜியமாக குறைக்க முடியும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழகத்தில் டெல்டா வகை தொற்றால் தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

    Also read: உருமாறிய கொரோனா தொற்றினை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ma subramanian

    அடுத்த செய்தி