ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உள் ஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திடாததற்கு கண்டனம்: ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம் செய்த இந்திய மாணவர் சங்கம்..

உள் ஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திடாததற்கு கண்டனம்: ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம் செய்த இந்திய மாணவர் சங்கம்..

ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம்

ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் பேனாவுடன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர், பேனாவை ஆட்சியரிடம்  கொடுத்து ஆளுநருக்கு அனுப்ப போவதாக தெரிவித்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில்  கையெழுத்திடாமல் இருக்கும் ஆளுநரை  கண்டித்து , ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில்  கையெழுத்து போடாமல் இருக்கும் ஆளுநர் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Also read... வாக்கு குறைந்தால் பதவி பறிபோகும் - நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் பேனாவுடன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர், பேனாவை ஆட்சியரிடம்  கொடுத்து ஆளுநருக்கு அனுப்ப போவதாக தெரிவித்தனர். பேனாவுடன் ஆட்சியரை சந்திக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் , கொரியர் மூலம்  ஆளுநருக்கு அனுப்ப போவதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்து கலைந்து  சென்றனர்.

First published:

Tags: Coimbatore, Governor Banwarilal purohit