10,11,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு: தண்ணீர்பாட்டில், சானிட்டைசர் எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு அனுமதி..

தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவில்  கூறப்பட்டுள்ளது.

10,11,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு: தண்ணீர்பாட்டில், சானிட்டைசர் எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு அனுமதி..
அரசு தேர்வுத் துறை
  • News18
  • Last Updated: September 18, 2020, 12:08 PM IST
  • Share this:
10, 11, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு, தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகளில் மாணவர்கள் தண்ணீர்பாட்டில் , சானிடைசர் எடுத்துச் செல்லவும், கையுறை அணிந்து தேர்வு எழுதவும் அரசுத் தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தோ்வர்களுக்கான தேர்வுகள், தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு ஆகியவை செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு  செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதில், தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருத்தல் வேண்டும்.


Also read... பள்ளிகளில் தேசபக்தி கல்வியை மீட்டெடுக்கவேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்..

தேர்வு மையத்திற்கு முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்குதல் வேண்டும். தேர்வர்கள் கையுறை அணிந்து தேர்வெழுத விரும்பினால், அதற்கு அனுமதிவழங்கலாம்.

தேர்வர்கள் தங்களுடன் கிருமி நாசினி மற்றும் தண்ணீர் பாட்டில்  எடுத்துவந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவேண்டும். தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவில்  கூறப்பட்டுள்ளது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading