Home /News /tamil-nadu /

'நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்வது தீர்வு ஆகாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

'நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்வது தீர்வு ஆகாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Neet Exam : நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தீர்வாக அமையாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வில் தோல்வியடைந்தாலும் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற முடியும் என்பதால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னையில் போக்குவரத்துக் காவல் துறையும், மாநகராட்சியும் இணைந்து மோட்டார் வாகனம் இல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” என்னும் பெயரில் சைக்கிள் பயணம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ALSO READ |  கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம் கலவரமானது..கல்வீச்சு.. போலீஸ் துப்பாக்கிச்சூடு

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறினார். நீட் தேர்வில் தோல்வியடைந்தாலும் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற முடியும் என்பதால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார் . மேலும் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தீர்வாக அமையாது என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Ma subramanian, Neet Exam

    அடுத்த செய்தி