• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவை கைவிட வேண்டும்-  ஜோதிமணி எம்.பி வேண்டுகோள்

மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவை கைவிட வேண்டும்-  ஜோதிமணி எம்.பி வேண்டுகோள்

மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவை கைவிட வேண்டும் என ஜோதிமணி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
    பழனியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி எம்.பி பேசுகையில், தமிழகத்தின் மீதும் தமிழக மாணவர்கள் மீதும் அநீதியாக திணிக்கப்பட்ட தேர்வு நீட் தேர்வு எனவும், சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நீட் தேர்வை நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

    நிச்சயமாக பாரத பிரதமர், குடியரசுத் தலைவர் நினைத்தால் நீட் தேர்வு தமிழகத்தில் இருந்து விளக்கப்படும். அதுவரை மாணவர்கள் மன தைரியத்துடன் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும், தற்கொலை எண்ணங்களை கைவிட வேண்டும். பெற்றோர்கள் மாணவர்கள் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்கக்கூடாது.

    தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் அரசியல் பின்னணி இல்லாமல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரை நியமித்து உள்ளனர்.

    நாகாலாந்தில் அவர் ஆளுநராக இருந்து செயல்பட்ட விதம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி அவரை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு எத்தகைய ஆளுநர்கள் வந்தாலும் திறமையாக எதிர்கொள்ளும் என ஜோதிமணி எம்பி தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: