`தேர்ச்சி வழங்கப்பட்டாலும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும்’ - அமைச்சர் செங்கோட்டையன்

`தேர்ச்சி வழங்கப்பட்டாலும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும்’ - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள்

9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. எனினும், மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா தொடர்பான ஊரடங்கால் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே இருந்து வந்தது. இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த சில கல்வி நிலையங்கள் ஆரம்பித்தன. ஆனால், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டு வருகின்றன.

  இந்த நிலையில், 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. எனினும், மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ’9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் வரும் நாட்களில் நடத்தி முடிக்கப்படும். மாணவர்களின் நலன் கருதியே மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எதைச் செய்தாலும் விமர்சனங்களை வைப்பதே எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், ’ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக உரிய நேரத்தில் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர்கள் செலுத்தியுள்ள தேர்வு கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: