பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க...! ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க...! ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
  • News18
  • Last Updated: November 18, 2019, 4:11 PM IST
  • Share this:
மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளியை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 11 மாணவர்கள் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீஃப் கடந்த 8-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என பாத்திமாவின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள், பாத்திமாவின் சக தோழிகள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடைபெற்றது. பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.


இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐஐடியில் பயிலும் 11 மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாத்திமா தற்கொலை போன்றவைகள் இனி தொடராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இந்த மாணவர்கள், குற்றவாளியை விரைந்து பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Also see...
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading