Home /News /tamil-nadu /

பட்டப்படிப்போடு மாணவர்கள் தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முதல்வர் பேச்சு

பட்டப்படிப்போடு மாணவர்கள் தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முதல்வர் பேச்சு

பட்டப்படிப்போடு மாணவர்கள் தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முதல்வர் பேச்சு

பட்டப்படிப்போடு மாணவர்கள் தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முதல்வர் பேச்சு

கல்லூரிக் காலம் என்பது வாழ்வில் இன்னொரு முறை கிடைக்காது. எனவே, கல்லூரிக் காலக் கல்வியை முழுமையாக, முறையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பட்டப்படிப்போடு மாணவர்கள் தங்களது தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பேசிய முதல்வர் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் அவர்  பேசியதாவது, மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கியதன் மூலமாக பெண்குலத்துக்கு மாபெரும் சேவையை இந்த அரசு உருவாக்கி இருப்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள்.

    உயர் கல்வியைப் பெறுவதற்காக கல்லூரிகளில் சேரக்கூடிய அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று அறிவித்து அதையும் செயல்படுத்த இருக்கிறோம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் கல்வியில் ஆற்றலில் மேன்மை அடைய, நான் முதல்வன் என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

    உயர் கல்வியில் பொற்காலம் என்று சொல்லத் தக்க வகையில் உயர் கல்வியில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்ட, திராவிட மாடல் கொள்கையின் படி இன்றைய அரசு செயல்பட்டு வருகிறது என்பதை 75 ஆண்டுகால கல்விப் பெருமை கொண்ட இந்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி விழாவில் சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

    திராவிட இயக்கம் என்பதே ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடைப்படையில் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். அத்தகைய சமூகநீதித் தத்துவத்தை தனது கல்வி நிறுவனத்திலும் பயன்படுத்தும் இந்த நிறுவனத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களது தொண்டு நூற்றாண்டுகள் கடந்து, பல நூற்றாண்டுகளுக்குத் தேவை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.



    அன்புள்ள மாணவியர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்னவென்று கேட்டால், இந்தக் கல்லூரிக் காலம் என்பது வாழ்வில் இன்னொரு முறை கிடைக்காது. எனவே, கல்லூரிக் காலக் கல்வியை முழுமையாக, முறையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், உங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், படிப்பு - பட்டம் ஆகியவை கடந்து, தனித்திறமைகள் கொண்டவர்களால் மட்டும்தான் முன்னேற்றம் காண முடியும்.

    அத்தகைய திறமைசாலிகளாக நீங்கள் வளர்ந்து, உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த மாநிலமும் பயனுறக்கூடிய வகையில், இந்த நாடும் பயனுறக்கூடிய வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் உரிமையோடு விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, MK Stalin

    அடுத்த செய்தி