ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பேருந்துகளில் கூட்ட நெரிசலால் தொங்கிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. கேள்விக் குறியான கொரோனா கட்டுப்பாடுகள்

பேருந்துகளில் கூட்ட நெரிசலால் தொங்கிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. கேள்விக் குறியான கொரோனா கட்டுப்பாடுகள்

கேள்விகுறியான கொரோனா கட்டுப்பாடுகள்

கேள்விகுறியான கொரோனா கட்டுப்பாடுகள்

வேலூரில் பள்ளி கல்லூரி நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்கின்றனர்.இதனால் கொரோனா பரவும் வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க உத்தரவிட்டது.

  இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றது.இதில் பயில பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்து மூலம் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் வருவது வழக்கம்.

  கொரோனாவால் தமிழக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் வீடுகளிலிருந்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரும் மாணவர்கள் சில நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் அனைத்து மாணவர்களுமே ஒரே பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதனை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி, கல்லூரி நேரங்களில் சிறப்பு பேருந்துகளை வழங்கி மாணவர்களுக்கு கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: CoronaVirus, Education department, TN Govt, Tn schools, Vellore