ஊரடங்கால் முடங்கிப் போன மாணவர்களின் கல்வி... கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படும் மாணவ, மாணவிகள்

ஊரடங்கால் முடங்கிப் போன மாணவர்களின் கல்வி... கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படும் மாணவ, மாணவிகள்
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், தருமபுரி மாவட்டத்தில் பல ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், தனியார் பள்ளி மாணவர்கள் செல்போனும், கையுமாக ஆன்லைன் வகுப்புகளில் மூழ்கியுள்ளனர். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலமோ கேள்விக் குறியாக உள்ளது.

குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாரம்பரியமான பல்லாங்குழி, கில்லி, கோலி என பல்வேறு விளையாட்டுகளிலேயே பொழுதை கழிக்கும் நிலையில், மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், தங்களது குழந்தைகளை ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிடுகின்றனர்.


அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்களை சாலையோர கடைகளிலும், தள்ளுவண்டிகளிலும், கல் உடைக்கும் இடங்களிலும், வயல்வெளிகளும் பார்க்க முடிகிறது.

வெளியில் சுற்றினால் தீயப் பழக்கங்களைக் கற்றுக் கொள்வார்கள் என்று கருதியே பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகளை பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.இன்னும் ஒரு சிலர் வேறு வழியில்லாததால், தங்களது தொழிலையே குழந்தைகளுக்கும் கற்றுத் தருவதாக கூறுகின்றனர்.

Also read... கொரோனா பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்வதில் தமிழகம் மூன்றாமிடம் - நிதி ஆயோக் சி.இ.ஓ

இந்நிலையில், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, தனியார் பள்ளி மாணவர்களைப் போல, தங்களது பிள்ளைகளும் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெற்றோர்.

ஆன்லைன் வகுப்புகள் மூலம் கண்களில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்தாலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் கல்வி கிடைத்துவிடுகிறது என்றே சொல்லலாம். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைதான் கவலைக்குரியதாக உள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading