மற்ற நாட்டு மாணவர்களும் இந்தியக் கொடியை பிடித்து எல்லையை கடந்து வருகிறார்கள் என
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் இருந்து டெல்லி வந்த மாணவர்கள் 26 பேர் சென்னைக்கு வந்தனர்.அந்த மாணவர்களை வரவேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் விமான நிலையத்தில் மாணவர்களை வரவேற்றனர்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் மாநில தலைவர் அண்ணாமலை, கடைசி நபரையும் மீட்கும் வரை தொடர்ச்சியாக மத்திய அரசு மீட்பு பணி தொடரும். இந்தியா தான் மற்ற நாடுகளுடன் பேசி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 4 அமைச்சர்கள் வெவ்வேறு நாட்டுக்கு சென்று மீட்பு பணிகளை முடிக்கிவிடப்பட்டுள்ளன.
Read More : ரேலா மருத்துவமனை டாக்டர்கள் இனி அரசு மருத்துமனையில் ஆபரேஷன் செய்வார்கள்.. ஏன்?
முறையாக விசா வாங்கி சென்ற மாணவர்களின் முழு விவரமும் மத்திய அரசிடம் இருப்பதாக கூறிய அவர், கடைசி நபரை மீட்கும் வரை மத்திய அரசு தொடர்ந்து இந்த பணியில் இருக்கும் என தெரிவித்தார். மேலும் மற்ற நாடுகளைவிட மீட்புப்பணியில் மத்திய அரசு சிறப்பாக செய்து வரக்கூடிய காரணத்தினால் வேறு நாட்டு மாணவர்களும் இந்திய கொடியைப் பிடித்துக் கொண்டு உக்ரைன் எல்லையை கடந்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
பின்னர் பேசிய மாணவி ப்ரீத்தி ஷோபியா, மேற்கு உக்ரைனில் இருந்து தாங்கள் வருவதாகவும், தாங்கள் இருக்கும் இடத்தில் போர் பதற்றம் இல்லை என தெரிவித்த அவர்கள் கார்க்கிவ், க்யூ பகுதியில் இந்திய மாணவர்கள் பலர் போருக்கு மத்தியில் சிக்கியுள்ளதாகவும் அங்கு இருக்கக்கூடிய மாணவர்களை இந்திய அரசு உடனடியாக மீட்டுக்கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Must Read : இந்த இரண்டு தவிர அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் வாபஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பின்னர் பேசிய மாணவி கமலீஸ்வரி, தான் 6 ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதாகவும் இன்னும் 2 மாதங்களில் தனது படிப்பு முடியவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், இந்திய அரசு கவனித்தில் கொண்டு தன்னை போன்ற மாணவர்களின் இந்த பிரச்சனையும் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும், தமிழக அரசும், இந்திய அரசும் மாணவர்களை மீட்பட்தில் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் தமிழக மற்றும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.