STUDENTS FROM 9TH CLASS TO 12TH CLASS SHOULD BE BROUGHT TO THE SCHOOL ON A ROTATING BASIS VAI
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவைக்க வேண்டும்: சா.அருணன்
பள்ளி மாணவிகள்
9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களை ஒருநாளும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த நாளும் பள்ளிக்கு வரவைத்தால் வழிக்காட்டு நெரிமுறைபடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கலாம்.
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டட வசதிக்கு ஏற்ப சுயற்சி முறையில் மாணவர்களை வர வைத்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிக்காட்டு நெறிமுறையோடு பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும். 25 மாணவர்கள் ஒரு அறையில் அமரும் விதமாக அறைகளில் இருக்கைகளை அமைக்க வேண்டும், இட வசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில், அதாவது காலை மற்றும் பிற்கல் இல்லையெனில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை வரவைக்க வேண்டும்.
அரசு மேனிலைப்பள்ளிகளில் கண்டிப்பாக சுழற்சி முறையை கடைப்பிடித்தால் மட்டுமே சமூக இடைவெளியை கடைப்பிக்க முடியும். ஏனெனில் பெரும்பாலான பள்ளிகளில் அரசு அறிவித்திருப்பது போல் ஒரு அறையில் 25 மாணவர்களை அமரவைத்தால் இடவசதி போதுமானதாக இருக்காது . ஆதலால் அரசு மேனிலைப்பள்ளிகளில் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
அதாவது 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களை ஒருநாளும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த நாளும் பள்ளிக்கு வரவைத்தால் வழிக்காட்டு நெரிமுறைபடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கலாம் . அப்படி இல்லையெனில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை காலையிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களை பிற்பகலில் வரவைத்தால்தான் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக இருக்கும். ஆதலால் சுழற்சி முறையில் மாணவர்களை வரவைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் நலன்கருதி தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.