மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிகல்வித்துறை

அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கு ஜூலை 16ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

  இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடைமுறையை பின்பற்றி ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான பணிகள் முடிக்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

  Also read: மேகதாது அணை விவகாரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

  நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் தவறு செய்வதால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இருக்கிறது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: