’சரக்குக்கு மிக்ஸிங் செய்ய தண்ணி கொடு’ - குடிமகன்களின் தொந்தரவால் பள்ளிக்குச் செல்ல அஞ்சும் மாணவர்கள்

’சரக்குக்கு மிக்ஸிங் செய்ய தண்ணி கொடு’ - குடிமகன்களின் தொந்தரவால் பள்ளிக்குச் செல்ல அஞ்சும் மாணவர்கள்
மதுபானக் கடை
  • Share this:
சென்னை அசோக்நகரில் பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை இருப்பதால் குடிமகன்கள் தொல்லைக் கொடுப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

சென்னை அசோக்நகரில் ஜி.ஆர்.டி மகாலட்சுமி வித்யாலயா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு அருகில் 7-வது அவென்யூவில்அரசு மதுபானக் கடை உள்ளது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் கல்வி நிறுவனங்கள் அருகே 50 மீட்டர் தொலைவவிற்கு மதுபானக் கடை அமைக்கக்கூடாது. எனவே, இந்தக் கடையை அகற்றக்கோரி பள்ளி நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகார் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பள்ளி மாணவன் விஷால் கூறுகையில், ’பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, டாஸ்மாக் கடை முன்பு ரோட்டில் நின்றுகொண்டே பலரும் மது அருந்துவதோடு, பலரும் போதையில் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துவதால் அந்த பகுதியைக் கடந்து வரமுடிவதில்லை. மேலும் சிலர் சரக்கு மிக்ஸிங் செய்ய தண்ணீர் பாட்டிலை கொடு, சரக்கு வாங்க காசு கொடு என்கின்றனர். இதனால் பயமாக இருக்கிறது" என்றார்.


அப்பள்ளி மாணவி சஞ்சனா கூறுகையில், ’பள்ளியில் இருந்து சிறிது தொலைவில் பள்ளியின் மைதானம் உள்ளது. மைதானத்திற்கு செல்ல டாஸ்மாக் கடையைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. பலரும் போதையில் அரைகுறை ஆடைகளுடன் கிடக்கின்றனர். இதனால் சிறப்பு வகுப்புகள் முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பயமாக இருக்கிறது’ என்றார்.

பள்ளிக்கு அருகில் வீடு இருந்தாலும் கூட, டாஸ்மாக வழியாக பெண் குழந்தைகளை தனியாக அனுப்ப பயந்துகொண்டு, தினமும் பள்ளிக்கு அழைத்து வருவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Also see:
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்