Home /News /tamil-nadu /

2 கால்களிலும் எலும்பு முறிவு; படுத்துக்கொண்டே +2 பரீட்சை எழுதிய சிந்து - ஒரு இன்ஸ்பிரேஷன்!

2 கால்களிலும் எலும்பு முறிவு; படுத்துக்கொண்டே +2 பரீட்சை எழுதிய சிந்து - ஒரு இன்ஸ்பிரேஷன்!

2 ஆம் வகுப்பு மாணவியை அவளின் தந்தை தன் இரண்டு கைகளிலும் தாங்கிப்பிடித்து, தூக்கி வந்து பொதுத்தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் - இதுவரை நாம் கண்டிராத, கேள்விப்பட்டிராத ஒரு நெகிழ்ச்சி சம்பவமாகும்.

2 ஆம் வகுப்பு மாணவியை அவளின் தந்தை தன் இரண்டு கைகளிலும் தாங்கிப்பிடித்து, தூக்கி வந்து பொதுத்தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் - இதுவரை நாம் கண்டிராத, கேள்விப்பட்டிராத ஒரு நெகிழ்ச்சி சம்பவமாகும்.

2 ஆம் வகுப்பு மாணவியை அவளின் தந்தை தன் இரண்டு கைகளிலும் தாங்கிப்பிடித்து, தூக்கி வந்து பொதுத்தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் - இதுவரை நாம் கண்டிராத, கேள்விப்பட்டிராத ஒரு நெகிழ்ச்சி சம்பவமாகும்.

  வயோதிகம் காரணமாக நடக்க முடியாத நிலையில் உள்ள தாத்தா, பாட்டிகளை குண்டுக்கட்டாக தூக்கி வந்தும், கட்டிலோடு சுமந்து கொண்டு வந்தும் ஒட்டுப் போட வைக்கும் சம்பவங்களை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்து வருகிறோம். ஆனால் விபத்தொன்றில் இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டு, "தற்காலிகமாக" நடக்க முடியாத சிந்து என்கிற ஒரு 12 ஆம் வகுப்பு மாணவியை அவளின் தந்தை தன் இரண்டு கைகளிலும் தாங்கிப்பிடித்து, தூக்கி வந்து பொதுத்தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் - இதுவரை நாம் கண்டிராத, கேள்விப்பட்டிராத ஒரு நெகிழ்ச்சி சம்பவமாகும்.

  இதை வெறுமனே ஒரு நெகிழ்ச்சி சம்பவமாகவோ அல்லது தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகவோ நாம் கடந்து விட முடியாது; சிந்து - பலருக்குமான ஒரு இன்ஸ்பிரேஷன்; சிந்து - மனஉறுதிக்கு ஒரு எடுத்துக்காட்டு!

  ஏனெனில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவில் 32,000 மாணவர்கள் தேர்வு எழுதவே வரவில்லை; அதாவது 32,000 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால், தேர்வின் மீதான அச்சம், கோவிட்-19 மீதான அச்சம் உட்பட பல காரணங்களால் பலரும் தேர்வு எழுத வரவில்லை. மறுகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தேர்வை எழுதாமல் இருக்க, சிந்துவுக்கு ஒரு காரணம் அல்ல, நூறு நேர்மையான காரணங்கள் இருந்த போதிலும் கூட அவள் தேர்வு எழுதுவதை புறக்கணிக்கவில்லை!

  தந்தையின் உதவி உடன் தேர்வறைக்கு வந்து, படுத்துக்கொண்டே தேர்வு எழுதினாள். ஆக சிந்துவை ஒரு இன்ஸ்பிரேஷன் என்று கூறாமல் வேறு எப்படி கூற?! சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் தோழி வீட்டின் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் மூட்டுகளும் கடுமையாக சேதமடைந்தன, கால்கள் மட்டுமின்றி சிந்துவின் முகம் மற்றும் தாடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

  உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்துவுக்கு 2 மேஜர் சர்ஜரிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. படுத்தப்படுக்கையாக கிடந்த சிந்து, மெல்ல மெல்ல குணமடைந்து தற்போது எழுந்து நிற்கும் அளவுக்கு உடல்நலம் தேறியுள்ளார். ஆனாலும் சிந்து, இன்னமும் சுயமாக நடக்க முடியாத நிலையில் தான் இருக்கிறாள். மேலும் சிந்துவால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவும் முடியாது.

  இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் பொதுத் தேர்வு எழுதிய சிந்து, தேர்வறையில் இருந்த அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்றார். சிந்துவை தேர்வு எழுத தூக்கி வந்த அவரின் தந்தை சக்தி, ஒரு தேநீர் வியாபாரி ஆவார். தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான நிதி வசதி தன்னிடம் இல்லை. டீ விற்கும் என்னால் பெருந்தொகையை ஏற்பாடு செய்ய முடியாது, எனவே சிந்துவின் மேல் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்திருந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் கூட, ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவி சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்.

  இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
  Published by:Vijay R
  First published:

  Tags: CM MK Stalin

  அடுத்த செய்தி