• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 750 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் மூலம் 9 வயது சிறுவன் சாதனை: பாராட்டி பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

750 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் மூலம் 9 வயது சிறுவன் சாதனை: பாராட்டி பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

சிறுவன் சர்வேஷ்

சிறுவன் சர்வேஷ்

750 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தை இரண்டு வாரத்தில் சிறுவன் சர்வேஷ் நிறைவு செய்தார். சிறுவனின் சாதனையை ஆசியா புக் ஆப் ரெக்காட் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதற்கான சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

  • Share this:
    சென்னையை சேர்ந்த சிறுவன் சர்வேஷ் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தை இரண்டு வாரத்தில் நிறைவு செய்தார். சிறுவனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை பரிசளித்தார்.

    தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர் சர்வேஷ் ஐக்கிய நாடுகளின் SDG உலகளாவிய இலக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  தொடர் ஓட்டம்  மேற்கொள்ள திட்டமிட்டார்.

    அதன்படி, கடந்த அக்டோபர் 2 ம் தேதி கன்னியாகுமரி வள்ளுவர் சிலையில் மாரத்தான் ஓட்டத்தை துவங்கி - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 750 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தை இரண்டு வாரத்தில் நிறைவு செய்துள்ளார்.

    இந்த மாரத்தான் நிறைவு நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர் சர்வேஷை வாழ்த்தி மாபெரும் தமிழ் கனவு எனும் நூலை சிறுவனுக்கு பரிசளித்தனர்.., இந்தநிகழ்வின் போது அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் , சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    இதையும் படிக்க: ஆழ் கடலுக்குள் கிரிக்கெட்: மெய் சிலிர்க்க வைத்த நீச்சல் வீரர்கள்!


    சிறுவனின் சாதனையை ஆசியா புக் ஆப் ரெக்காட் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதற்கான சான்றிதழை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வின் போது சாய்ராம் நிறுவனங்களின் சார்பாக  அரசின் கொரோனோ நிவாரண நிதிக்கு 12,34,567 ரூபாய்க்கான காசோலையை சாய்ராம் நிறுவனங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சிறுவன் சர்வேஷ், “
    அனைவரின் ஒத்துழைப்பினால் மட்டுமே இந்த சாதனை ஓட்டத்தை நிறைவு செய்ய முடிந்தது. முதல்வர் நிகழ்வுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 2030 க்குள் SDG இலக்குகளை நிறைவேற்ற இந்த தொடர் ஓட்டத்தை மேற்கொண்டேன். ஒரு நாளைக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் ஓடி இந்த சாதனையை நிறைவு செய்தேன் “ என்று குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க: மசினக்குடி புலிக்கு மன அழுத்தம்... மைசூருக்கு அனுப்பி வைப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: