திருப்புவனத்தில் 5 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

திருப்புவனத்தில் 5 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

அனுமதி மறுக்கப்பட்ட மாணவி

நீட் தேர்வு 2 மணிக்கு ஆரம்பித்தாலும் மாணவர்கள் தேர்வு மையத்தினுள் அரைமணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

  • Share this:
திருப்புவனத்தில் நீட் தேர்வு  எழுத  5நிமிடம் தாமதமாக வந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம்  லாடனேந்தால் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 480 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்த நிலையில் 393 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். இந்நிலையில் முழுமையான சோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு அனுப்ப்பட்டனர்.

இதில் ஒரு மாணவர்க்கு ஆதார் ஒரிஜினல்  இல்லமால் வந்ததால் பல்வேறு விசாரணை பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டர்.  கழுத்தில் செயின் அணிருந்த மாணவி ஒருவர் அதை கழற்ற முடியமால் இருந்த்தால் கட்பன்னி எடுத்தனர். 100அடியில் இருந்தே மாணவர்கள் நடந்து வந்து அவர்கள் கொண்டு வந்த  ஆவணங்கள் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டன்ர்.

இந்நிலையில் மானாமதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் 1.35 மணிக்கு  தேர்வு மையத்திற்கு வந்தார். 5 நிமிடங்கள் தாமதமாக   வந்த அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. நீட் தேர்வு 2 மணிக்கு ஆரம்பித்தாலும் மாணவர்கள் தேர்வு மையத்தினுள் அரைமணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.ஆனால் 5 நிமிடங்களே தாமதமாக உள்ளதால் அனுமதிக்க வேண்டுமென நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், தேர்வு எழுத அனுமதி கிடைக்காததால் வேறு வழியின்றி அந்த மாணவி வீட்டிற்கு திரும்பி சென்றார்.
Published by:Vijay R
First published: