ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை - 5 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை - 5 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு

தற்கொலை செய்த மாணவர் கோபால் குமார்

தற்கொலை செய்த மாணவர் கோபால் குமார்

5 மாதங்களில் ஐஐடியில் நிகழும் 3-வது தற்கொலை இதுவாகும். மாணவன் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை ஐஐடி வளாகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று இரவு உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோபால் பாபு (26) என்ற மாணவர் தூக்கிட்டு நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  விரைந்து வந்த காவல்துறையினர் மாணவரின் பிரேதத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  தொடர்ச்சியாக ஐ ஐ டி வளாகத்தில் மாணவர்களின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது, குறிப்பாக இந்த மாதத்தில் நடைபெறும் இரண்டாவதாக நடைபெற்ற உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கோபால் பாபு என்ற மாணவரின் உயிரிழப்பு

  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  5 மாதங்களில் ஐஐடியில் நிகழும் 3-வது தற்கொலை இதுவாகும். மாணவன் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also See...

  Published by:Sankar
  First published:

  Tags: IIT Chennai, Lok Sabha Key Constituency