ரூ.8 லட்ச கொடுத்ததால் சான்றிதழ் என மிரட்டிய கல்லூரி: அரசு தலையீட்டுக்கு பிறகு சான்றிதழைப் பெற்ற ஏழை மாணவி

மாதிரி படம்

தனியார் கல்லூரியிடமிருந்து அரசின் தலையீட்டுக்குப் பிறகு அசல் சான்றிதழை மாணவி பெற்றுள்ளார்.

  • Share this:
சேர்க்கையின்போது சமர்ப்பித்த அசல் சான்றிதழ்களை திரும்ப பெற ரூபாய் 8 லட்சம் கேட்டதாக மாணவி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அசல் சான்றிதழ்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

சென்னையை ஒட்டிய குன்றத்தூரில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு மூலம் 2019-20 ல் பள்ளிப்படிப்பை முடித்த மாணவி காயத்ரி பிஸியோதெரபி படிப்பில் சேர்ந்தார். ஈரோட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்த காயத்ரியின் தந்தை கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலாது என்று தெரிவித்ததால் தனது சேர்க்கையை ரத்து செய்யுமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டிருந்தார்.

ஆனால் ரூபாய் 8 லட்சம் கொடுத்தால் மட்டுமே அசல் சான்றிதழ்களை திரும்பத் தர முடியும் என்று கல்லூரி கூறியதாக மாணவி மருத்துவக் கல்வி இயக்குனரகம் மற்றும் குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். காயத்ரியின் தந்தை விவசாயி ஆவார். இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அசல் சான்றிதழ்களை கல்லூரி வைத்துக் கொள்ளக் கூடாது. சேர்க்கையை ரத்து செய்தால் விதிகள் படி மாணவர் ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவியின் பொருளாதார சூழல் பொருத்து அதிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யலாம்" என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், மாணவி காயத்ரியின் அசல் சான்றிதழ்களை ஈரோட்டுக்கே கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஏற்பாட்டின் மூலம் அங்கேயே தன் குடும்பத்துடன் சென்று பெற்றுள்ளார்.  இதனால் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், நடவடிக்கை எடுத்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி என தெரிவித்தார். தன் சொந்த ஊரிலேயே வேறு கல்லூரியில் சேர திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: