கட்டணத்தை ஏற்கும் அரசின் அறிவிப்பு காலதாமதமானதால்.. மருத்துவராகும் கனவை இழந்த மாணவி வேதனை
கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற காலதாமதமான அறிவிப்பால் தன் மருத்துவராகும் கனவு பறிபோயுள்ளதாக மாணவி திவ்யா வேதனை தெரிவித்துள்ளார்.

மாணவி திவ்யா.
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 7:14 PM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சின்ன காக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோதி கிருஷ்ணன் பாப்பாத்தி தம்பதியினர். கூலித்தொழில் செய்துவரும் இவர்களுக்கு கோமதி (19), திவ்யா (17) ஆகிய இரு மகள்களும் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் நீலமேகம் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், இரண்டாவது மகள் திவ்யா அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று, நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண் பெற்றிருந்தார்.
இதைத்தொடர்ந்து பல் மருத்துவம் படிக்க அவர் விண்ணப்பித்திருந்தார். கடந்த நவம்பர் 20-இல் சென்னையில் நடைபெற்ற கலந்தாய்விலும் பங்கேற்றார். எனினும் அவருக்கு சுயநிதிக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது, அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. Also read: குடிசைவாழ் மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளவேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்
சுயநிதிக் கல்லூரியில் படிக்க ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் செலவாகும் என்பதால் நேர்காணலில் பங்கேற்றும் வசதியின்மை காரணமாக பெற்றோருடன் ஊர் திரும்பினார்.
இந்நிலையில்தான் நவம்பர் 21-ஆம் தேதி அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைத்த மாணவ மாணவிகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவம் படிக்க இடம் கிடைத்த மாணவ மாணவியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாணவர்கள் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்ற அரசின் உத்தரவு வெளியான நிலையில், தனக்கான வாய்ப்பை இழந்ததை எண்ணி மனமுடைந்து போயுள்ளார் மாணவி திவ்யா.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு அரசு இரண்டாம் கட்ட நேர்காணலில் பங்கேற்கும் வாய்ப்பை அளித்து கல்லூரியைத் தேர்வு செய்யும் வாய்ப்பையும் வழங்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இரண்டாவது மகள் திவ்யா அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று, நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண் பெற்றிருந்தார்.
இதைத்தொடர்ந்து பல் மருத்துவம் படிக்க அவர் விண்ணப்பித்திருந்தார். கடந்த நவம்பர் 20-இல் சென்னையில் நடைபெற்ற கலந்தாய்விலும் பங்கேற்றார். எனினும் அவருக்கு சுயநிதிக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது, அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.