ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேனி அருகே பிளஸ் 1 மாணவர் தற்கொலை - ஆன்லைன் வகுப்பு புரியாததால் விபரீத முடிவு

தேனி அருகே பிளஸ் 1 மாணவர் தற்கொலை - ஆன்லைன் வகுப்பு புரியாததால் விபரீத முடிவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாத காரணத்தால் 11ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆண்டிபட்டியை அடுத்த கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவரான விக்கிரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

  பள்ளி வகுப்பு ஆன்லைனில் நடைபெற்று வரும் நிலையில், வகுப்புகள் புரியாததால் அதனை தொடர்ந்து விக்கிரபாண்டி புறக்கணித்து வந்ததாகவும், இதனால் அவரது தந்தை இளங்கோவன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க...5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோயில் - நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட பொதுமக்கள்

  இந்த சூழலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற விக்கிரபாண்டியை மீட்ட பெற்றோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு மாணவன் விக்கிரபாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Online class, Theni