• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை - முதல்வர் ஸ்டாலின் வேதனை!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை - முதல்வர் ஸ்டாலின் வேதனை!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.

    இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்நிலையில், இன்று 3-வது முறையாக நீட் தேர்வு எழுத தனுஷ் தீவிரமாக தயாராகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 1 மணி வரை மாணவர் தனுஷ் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Also read: திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. காவல் துறையினர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு..

    இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, நீட் தேர்வு அச்சத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்ததை அறிந்து வேதனை அடைந்தேன். நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது.

    மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமத்தை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும்வரை இந்த சட்டப் போராட்டம் தொடரும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா நாளை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: